Monday, 13 July 2015

தந்தையர் தினம்


இன்று தந்தையர் தினமாம். இந்நாளில் பெற்ற பிள்ளைக்கும் பெறாதப் பிள்ளைக்கும் தந்தையா இருந்த இவருக்கு வாழ்த்து சொல்வதை நான் பெருமையா நினைக்கிறேன்.

தன்னோட பதிமூன்றாவது வயதில் இருந்தே அயராது உழைத்து வாழ்வில் முன்னேறியவர். 

பெற்ற தந்தைக்கு நல்ல மகனாகவும், கட்டிய மனைவிக்கு நல்லக் கணவனாகவும் வாழ்ந்தவர்.

ஓய்வு என்றால் என்னவென்று அறியாது உழைக்கும் உழைப்பாளி

ஏழைப் பணக்காரர் என்ற வித்தியாசம் பார்க்காமல் உதவுவதில் கர்ணரையும் மிஞ்சியவர்.


எத்தனையோ குடும்பத்தில் விளக்கேற்றி வைத்தவர்.


கண்டிப்பை மட்டுமே பாத்திருந்த பிள்ளைகளுக்கு தன் பாசத்தை எல்லாம் காட்ட முடியாத துர்பாக்கியசாலி.


பிள்ளைகளுக்காக கனவு கோட்டை கட்டியவர்.


வாழ்வில் தான் கண்ட கனவை எல்லாம் நனவாக்கும் முன்பே காலனின் கையில்
சிக்கி பழி சொல்லுக்கு ஆளானவர்.


எத்தனை அவச்சொல், எத்தனை அவமானம், எத்தனை இழப்பு அத்தனையும் தாங்கி
உயிர் நீர்த்த அன்பு உள்ளத்துக்கு காணிக்கையா என் வாழ்த்துகள்.


இழந்த உம் அன்பையும், பாசத்தையும் உணர்த்த மீண்டும் இம் மண்ணில் நீர் பிறக்க வேண்டும்.


எல்லாவுமாகிய .......அப்பா.

No comments:

Post a Comment