ஆந்திரா சமையல் நல்லா சூப்பரா சமைப்பாங்க.
அவுங்களோடு நான் இருந்தப்போ அந்த அம்மாவுக்கு வலது பக்கம் கை, கால் சோக் வந்து பேசக் கூட முடியாத நிலமையில் இருந்தாங்க.
அந்த அம்மாவை கவனிக்க தான் நான் அவுங்க கூட இருந்தேன். தன்னால நடக்க கஷ்டமா இருந்த போதும் தன்னோட கணவனுக்கு தானே சமைச்சிக் கொடுக்க தான் விருப்புவாங்க.
தன்னோட இடது கால் கை பலத்தில் என்னோட உதவியில் சமையல் செய்வாங்க.
கடந்த வருஷம் ஆடி மாதம் அவர்களோட தான் இருந்தேன். இப்போ நல்லா குணம் ஆயிட்டாங்க. ரொம்ப சந்தோஷம்.
அந்த அம்மாவுக்கு நான்வெஜ் உணவு தான் பிடிக்கும். ஆனாலும் வெஜ் உணவில் வித்தியாசமா சமைப்பாங்க. அதில் எனக்கு பிடித்ததில் தப்பளம் ஒன்று.
தப்பளம் செய்ய தேவையானவைகள்
( சர்க்கரைவள்ளிக் கிழங்கு +
சுரைக்காய் சதுரமாக நறுக்கியது) -1/4 கிலோ
முருங்கைக் காய்- 2
தக்காளி பழம் - 2
காய்ந்த மிளகாய் வற்றல் - 7அல்லது 8
பூண்டு - 4 பல்
உப்பு + எண்ணெய் - தேவையான அளவு
புளிச்சகீரை (கோங்கூரா), கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை ;
சுரைக்காயுடன் சக்கரைவள்ளிக் கிழங்கை வேக வைத்து தனியா வைச்சிக்கோங்க.
முருங்கைக் காயை துண்டுகள் போட்டு வேக வைத்து சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்து வைச்சிக்கோங்க.
பூண்டை நல்லா பொடியா நறுக்கிக்கோங்க.
வற்றலுடன் கொஞ்சம் கடுகு சேர்த்து ஊற வைத்து மிக்ஸியில் மையா அரைச்சிக்கோங்க.
இனி ஒரு கடாயில் சிரிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து நறுக்கிய புளிச்சக் கீரை, தக்காளி போட்டு நல்லா வதக்குங்க.
தக்காளி வதங்கியதும் வேக வைத்த சுரைக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, முருங்கை சதை பற்று , அரைத்த மிளகாய் கடுகு விழுது எல்லாம் போட்டு கொஞ்சமா தண்ணீர் விட்டு கொதிக்க விடுங்க.
நல்லா தளதளனு கொதி வந்து பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலையை அப்படியே ஒரே ஆர்க்கா போடுங்க. கடைசியா கொஞ்சம் எண்ணெயை சூடாக்கி நறுக்கி வைத்திருக்கும் பூண்டை நல்லா பொறித்து காய்கறி கலவையில் சேர்த்துக்கோங்க.
சுவையான " தப்பளம் " ரெடி.
இட்லி, தோசை, சப்பாத்தியோடு சாப்பிட சுவையா இருக்கும். எனக்கு பிடிக்கும்....உங்களுக்கும் பிடிக்கும்......
அப்பளம் பாத்துருக்கேன் ... தலையில் ''தப்பாளம்'' வச்சும் பாத்துருக்கேன்.... இது என்ன புதுசா தப்பளம்...???
ReplyDeletehttps://www.scientificjudgment.com/