Friday 17 July 2015

ஆடி வெள்ளிக் கிழமை அன்று அம்மனுக்கு மஞ்சள் காப்பு.


மாதங்களில் எனக்கு பிடித்த மாதம் என்றால் அது ஆடி மாதம் தான். 
தமிழ் மாதங்கள் எல்லாமே பண்டிகை இல்லாமல் இல்லை.ஆனாலும் ஆடி மாதம் போல் சந்தோஷம் நிறைந்த மாதம் எதுவும் இல்லை என்றே சொல்லுவேன்.

ஆடி மாதத்தில் தான் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி புரம், ஆடி கிருத்திகை, ஆடி தபசு, ஆடி பெருக்குனு விரதங்களும், பண்டிகைகள் ஒன்று மாத்தி ஒன்று வந்துக் கொண்டிருக்கும்.

ஆடி மாதம் பிறக்கும் முன்பே கோயில்களில் விழா எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். வீடு வீடுக்கு வரி வசூல் பண்ணி கொடை விழா எடுப்பதும் இந்த மாதத்தில் தான்.
ஆடி அமாவாசை நம்மோட முன்னோர்களுக்கு ஆன நாள் என்றே சொல்லலாம். 
இறந்தவர்களின் ஆத்மாவுக்கு எள்ளு தண்ணீர் கொடுத்து அவர்கள் விரும்பி உண்ணும் உணவு படைத்து வணங்கி அவர்களின் ஆசிர்வாத்தை கேட்கும் நாள் .
பண்டிகை என்றாலே உணவு பதார்த்தங்கள் இல்லாமலா. மணக்க மணக்க வித விதமான சமையல் சாப்பாடு தான்.

இந்த வருடம் 17.7.15ல் வெள்ளிக் கிழமை அன்று ஆடி மாதம் பிறக்கிறது. பிறக்கும் போதே விரதத்தோடு தான் பிறக்கிறது.

ஆடி மாதத்திற்கு அம்மன் மாதம் என்றும் சொல்வதுண்டு. இந்த மாதத்தில் தான் அம்மனுக்கு கொடை விழா எடுப்பார்கள்.

அம்மன் என்றால் அதுவும் மாரி அம்மனுக்கு தான் கொண்டாட்டம். எங்கு பார்த்தாலும் அம்மன் துதி பாடும் பாடலைக் கேட்கலாம்.

பங்குனி, சித்திரை வெயில் தாக்கத்தால் அம்மன் நேய் கண்டவர்கள் நேத்திக் கடன் செலுத்தும் நாட்களும் இந்த ஆடி மாதத்தில் தான்.

இன்று  ஆடி வெள்ளி. ஆடி மாதப் பிறப்பு.
பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து மஞ்சள் பூசி கைகளில் மருதாணி இட்டு மங்களகரகமா விரதம் இருந்து அம்மனை வழிப்படும் நாள். திருமணம், குழந்தை பாக்கியம் சகல செளப் பாக்கியம் வேண்டி விரதம் தொடங்கும் நாள்.

பயன் பெறுக

***** பூங்கோதை****

No comments:

Post a Comment