Thursday, 25 February 2016

வாழைத்தண்டு ஜூஸ்உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி உடல் பருமனைக் குறைக்கவும்,வயிற்றுப் புண்ணை ஆற்றவும் சிறந்த டானிக்.


வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலை தடுக்கும். சிறுநீர் கற்களைக் கரைக்க அருமருந்து.வாழைத் தண்டோட விலை வெறும் ஐந்து ரூயாய் தான்.எளிய முறையில் சிறந்த டானிக்.தண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாய் நறுக்கி மிக்‌ஷியில் அரைத்து வடிக்கட்டவும்.வடிக்கட்டிய வாழைத்தண்டின் சாறுடன் 1/2டம்பளர் தண்ணீர், 1/2 டம்பளர் மோர்ருடன் 1/2சிட்டிகை சீரகம், மீளகு தூள்,உப்பு கலர்ந்து தேவையானால் கறிவேப்பிலை, மல்லிதழையை நறுக்கி போட்டு குடிக்கலாம்.வெயில் நேரத்தில் தினம் ஒரு ஜூஸ்ஸில் இனி வாழைத்தண்டும் இடம் பெறட்டும்.


.

சொதிக் குழம்பு
திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக் குழம்பு


கேரட்,பீன்ஸ்,உருளை,முருங்கைக்காய் எல்லாத்தையும் நீளவாக்கில் ஒரே மாதிரி நறுக்கிக்கோங்க.

இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலம்,சோம்பு சேர்த்து நல்லா மைய அரைச்சிக்கோங்க.

ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை உப்பு, மஞ்சள் சேர்த்து வேக விடுங்க.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு,பட்டை,கிராம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கி வேகும் காய்கறிக் கலவையில் சேருங்க.

காய்கறிகள் நல்லா வெந்தது. கொஞ்சம் நிலக்கடலை,முந்திரிப் பருப்பை நல்லா மையாக அரைத்து கலவையில் சேர்த்து கொதி வந்ததும் கறிவேப்பிலை, மல்லிதழை போட்டு இறக்கவும்.

நிலக்கடலைக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

சப்பாத்தி, தோசை,இட்லிக்கும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியா இருக்கும்

Saturday, 20 February 2016

பள்ளி சேட்டை

ஒன்னாம் வகுப்பில இருந்து எட்டாம் வகுப்பு வரை நாங்க பண்ணாத சேட்டையே கிடையாது.

ரெண்டு ப்ரீட் ஒழுங்கா நடந்தா மூனாம் ப்ரீட் கண்டிப்பா கேம்ஸ் தான்.அதிலும் கேம்ஸ் டீச்சர் பாதி நாள் வரமாட்டாங்க.

ஒருத்தர் மேல் ஒருத்தர் குனியவைச்சு சுவரை தாண்டிப் பக்கத்து தோட்டத்தில மாங்கா,புளியங்கா கொடுக்காபுளி பறிச்சி தின்போம். அதுவும் போக பக்கத்தில ஒடுர வாய்கால்ல நல்லா குதியாட்டம் போடுவோம்.

சில நேரத்தில் க்ளாஸுக்கு டீச்சர் வர மாட்டாங்க. ஸ்கூல் பக்கத்தில ஒரு கல்யாண மண்டபம். கேட்கனுமா ஆட்டம் பாட்டத்துக்கு.

நாங்க யாரு இருக்கிற பயந்தாங்கோலி பிள்ளைகளை எல்லாம் பேய் கதை சொல்லி பயம் காட்டி அலர விடுவோம். இப்படியே போய்கிட்டு இருந்த சந்தோஷத்தில பெரிய இடி விழுந்தது போல் ஒட்டு மொத்தமா எல்லாரும் எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணிட்டோம்.

பாஸ் ஆனா கையோட பக்கத்து ஸ்கூல்ல அட்மிஷன் வாங்கிட்டேன். ஆனா அந்த ஸ்கூல்ல படிக்க கூடாது நான் சொல்லுர ஸ்கூல்ல தான் படிக்கனும்னு வீட்டில கட்டாயப் படுத்திட்டாங்க. வேற வழி.

முதல் நாள் வகுப்பில் எல்லாம் முகம் தெரியாத பிள்ளைகள். என்னோட படிச்ச பிள்ளைகள் எல்லாம் வேற ஸ்கூல்ல.

ரெண்டாம் நாள் ஸ்கூல் ப்ரேயர்ல யார்ரெல்லாம் டியூசன் படிக்கிரீங்கனு கேட்டதும் நான் முதல் ஆளா கையத்தூங்கி மாட்டிக் கிட்டேன்.ஆமாம் அப்படி தான் சொல்லனும்.டியூசன் என்கிற பேரில் கொஞ்சப் பிள்ளைகளை தனியா ஒரு ரூமில் வைச்சிருந்தாங்க.

நையிந்த் புக்கெல்லாம் கைக்கு வந்துட்டு ஆனா க்ளாஸ் மட்டும் எடுக்க ஆரம்பிக்கலை.நல்லா படிக்கனும்கிற ஆர்வத்தில ஆஸ்டலுக்கு வேற வந்தாச்சி.

ஒரு வாரமா பாடம் எதுவுமே நடத்த டீச்சர் யாருமே வரலை. அப்பறமா ஒரு டீச்சர் வந்தாங்க்ல். வந்ததுமே கேள்வி மேல் கேள்வி கேட்டால் ஒருத்தருக்கும் ஒன்னும் தெரியலை.ஆமா க்ஸாஸ் எடுத்திருந்தா தானே எதுவும் தெரியும்.

ஒன்னு முதல் எட்டு வரை ஐந்து ராங்க்கில் இருந்த எனக்கோ சுத்தமா எதுவுமே விளங்கலை.மறுநாள் பெரிய போடில் எ, பி ,சி ,டி எழுதி போட்டாங்க. ரெண்டாம் நாள் அ,ஆ, இ,ஈ.அவ்வளவு தான். நான் அழுதுடவே செஞ்சேன்.

மறுநாளில் இருந்து ஸ்கூல் கட் அடிச்சிட்டு ப்ரண்ட் யாருடைய வீட்டிலாவது மாற்றி மாற்றி நாளை தள்ளியாச்சி.அப்படியே ஒரு மாதம் ஆனது. ரேங்க் ரிப்போட் கொடுத்தாங்க. சொல்லவே வெட்கப்படும் மார்க். மொத்தத்தில் 25 மார்க். அதான் முதல் மார்க்கும் கூட.

கையெழுத்து வாங்க வீட்டுக்கு வந்தால் ஒரே திட்டு.அப்போ தான் பெரிய ஐயா கேட்டாங்க.உனக்கு என்ன பிரச்சனை தயங்காம சொல்லுனு. நடந்த கதையெல்லாம் ஒன்னு விடாமல் சொன்னேன்.

அப்பறம் தான் தெரிந்தது அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பெரிய ஐயா கொழுந்தியார்னு.கேட்கணுமா ஒரே லெப்ட் அன் ரைட் தான்.பயங்கிற வாக்குவாதம்.தன்னோட அத்தை மகள்ட சண்டைப் போட்டு என்னைப் போல் இருந்த பிள்ளைகளை எல்லாம் விடு விச்சி எல்லாருக்கும் நல்ல வழி காட்டினாங்க.

இதை இங்க ஏன் சொல்லுறேன்னா. என்னைப் போல் படிக்காத குடும்பத்தில் இருந்து படிக்க வரும் பிள்ளைகளோட படிப்பு பாதியிலே கெட்டுப் போக ஒரு சில இடங்களில் பள்ளி நிர்வாகமே காரணமா இருக்கிறாங்க.

சமீபத்தில் கூட நர்ஸ்ஸிங் படிக்கும் மாணவ மாணவிகள் நிலை குறித்து தாய் தந்தையர் வேதனை படுவதை பார்க்கும் போது பரிதாபகமா இருக்கு.

முதல் காதல்
மண்வாசனை படம் ரிலிஸ் ஆன புதுசு. அப்பெல்லாம் வாலிப பசங்களுக்கு ரேவதியும் ராதாவும் தான் கனவு தேவதைகள்.

பெருமாள் அண்ணாச்சி காமவுண்ட் தான் ஒட்டு மொத்த பெண்களின் ப்ருந்தாவனம்.

காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சி படிப்பேன்.அம்மாவும், அக்காவும் வேலைக்கு போனதும் கதவை அடைச்சிட்டு தலைமாட்டில் ரேடியாவை பாட விட்டுட்டு தூங்கிடுவேன்.

மணி 7.30 ஆனதும் என் கூடப் படிக்கிற பிள்ளைகள் ஒவ்வொருத்தரா வந்த பிறகு தான் ஸ்கூலுக்கு கிளம்புவேன். எந்த தியோட்டர்ல என்ன படம் ஒடுது. யார் நைட் ஸ்ஸோ படம் பார்க்க போனானு கதை கதையா பேசுவோம்.

மொத்தமா பத்து பேருக்கு குறையாமல் ஒன்னா ஒரே மாதிரி யூனிபாம் போட்டு ஸ்கூலுக்கு கிளம்பி போனால் எங்களை எதிர் பார்த்து ஒரு கூட்டம் அங்கு நிற்கும்.

ஸ்கூல் நடந்து போகும் தூரம் தான். பக்கத்தில் நான்கு வழி சாலை வேறு. அதை கடக்க நிற்கும் போது பக்கத்து ஹோட்டலில் என்ன பாட்டு ஓடிட்டு இருந்தாலும் சரி எங்களை பார்த்ததும் மண்வாசனை படத்தில் அரிசி குத்தும் அக்கா மகளேனு பாட்டை ஒட விட்டுவாங்க.

ஒருநாள் சனிக்கிழமை மதியம் வரைக்கும் தான் ஸ்கூல். எப்பவும் அக்கா வேலை செய்யும் வீட்டுக்கு தான் ஸ்கூல் விட்டதும் போவேன். ஆனா அன்னைக்கி பிள்ளைகளோடு சேர்ந்து எங்க வீட்டுக்கு வரும் போது தான் அவனைப் பார்த்தேன்.

அப்படியே பாண்டியன் போல் தோற்றதில். அவனோட நண்பனிடம் என்னை கைக் காட்டி எதோ சொல்லிக்கிட்டு இருந்தான்.

சரி பூவா நாளைக்கி லீவு .வீட்டில் தானே இருப்பே. என் காதில் விழுந்த முதல் வார்த்தை அது.அதில் இருந்து என்னை பார்க்கும் போது எல்லாம் பூவா பூவானு யாரிடமாவது பேசிக்கிட்டு இருப்பான். நானோ வேகமா நடையக் கட்டுவேன்.

எங்க காமெவுண்டில் ரவினு ஒரு சின்னப் பையன் உண்டு. அவன் கிட்ட தான் என்னைப் பற்றி எல்லாம் கேட்டு வைச்சிருந்திருக்கான்.எனக்கும் அவனை பிடிக்கும். ஆனா பேச மாட்டேன்.

பிறந்ததுமே அத்தை மகனுக்கா வளர்க்கப்பட்டவள் .எப்படி அவனிடம் பேச முடியும். ஆனால் அத்தை பையனை ஒரு முறைக் கூடப் பார்த்ததில்லை.

ஒரு முறை எனக்கு உடம்பு முடியாமல் போனப்போ எனக்காக வேண்டிக்கிட்டு கோயிலுக்கு போய் மொட்டை போட்டுக்கிட்டான்.அதுவும் கூட ரவி பயல் சொல்லி தான் தெரியும்.

மெல்ல மெல்ல ஸ்கூல பிள்ளைகள் எல்லாத்திற்க்ய்ம் தெரிந்து ஒரே கிண்டலும் கேளியும் தான்.சந்தர்ப சூழ்நிலையில் எனக்கோ வேறு ஒருத்தரோடு திருமணம் ஆயிட்டு.

அப்போ தான் ரயில்பயணமும், ஒரு தலை ராகமும் இன்னும் சில காதல் தோல்வி படங்கள் வெளி வந்தது.
அப்பறம் என்ன ஒரே சோகப் பாட்டு தான் நான் ஒரு ராசியில்லா ராஜா. இரண்டு பிள்ளைகள் ஆன பிறகு தான் தாடியோடு அவனைப் பார்த்தேன்.

முதல் காதல் என்றும் மறக்க முடியாதது.

ஆட்டுக்கு அடிச்சுக்குவான், கோழிக்கி கூடிக்குவான்திருநெல்வேலி பக்கம் "ஆட்டுக்கு அடிச்சுக்குவான், கோழிக்கி கூடிக்குவான்னு" ஒரு பழமொழி உண்டு.

ஊருக்குள்ள என்ன விசேஷ்ம்னாலும் உடனே சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைப்பதில் நம்மூர்காரனை யாரும் அசைச்சிக்க முடியாது.அம்புடு பாசக்காரன்ங்க.

கோயில்ல கொடை வந்தா போதும் கடனகிடன வாங்கி வீட்டுக்கு ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டுக்குவோம். அதுக்கு் நல்லா இறைப் போட்டு கொழு கொழுனு வளர்த்து வைச்சிப்போம்.

அங்காளி பங்காளி வீட்டுல போய் ரொம்ப மரியாதையா கோயில் கொடைக்கி வரச் சொல்லி வெற்றிலையில காசு வைச்சிக் கூப்பிடுவான்ங்க.

அதுமட்டுமா மச்சான் கிடா வாங்கி விட்டுருக்கேன் குடும்பத்தோடு வந்துடுன்ன. ஒ...அப்படியா சரி மாப்பிள கிடால்லாம் வாங்கி விட்டுருக்க வராம இருப்பேனா. கண்டிப்பா வந்துடுவேன்னு ரொம்ப சந்தோஷமா அனுப்பி வைப்பான்.

கொடை நாளும் வரும். மாப்பிள்ளையும் மச்சானும் ஊர்க்கண்ணே படும் அளவுக்கு ஒற்றுமையா சாமி கும்பிடுவதையும்,பொங்கல் வைப்பதையும் பார்க்கனுமே.

அடுத்த அடி ஆரம்பம் வீட்டில பிள்ளைப் போல் வளர்த்த கிடா குட்டி மேல் விழும்.வெட்டுப் பட்ட கிடாவை அடி பிடினு ஆள் ஆளுக்கு அடிச்சிப் பிடிச்சி கறி அடுப்பில் கொதிக்கும்.

வா மச்சான் கொஞ்சம் சரக்கு ஏற்றுவோம்னு வேண்டிய மட்டும் நல்லா போதைய ஏற்றும் போது தான் அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி எழும்பி கொஞ்சம் மனக் கஷ்டம் வரும்.

அப்பறம் என்ன சாப்பாடு தான். இலையில சோறு விழும் முன்னே வசைச் சொல்லும் வந்து நிற்கும். மச்சானுக்கு நல்லா எழும்பு கறியா பெறக்கிப் போடு கடிக்கட்டும்பான்.

நான்னென்ன எழும்பு கடிக்கவா இங்க வந்தேன்னு ஆரம்பிச்சி சில நேரத்தில் வெட்டு குத்து வரை போகும்.ஏன்னா நம்ம ஊர்க்காரனுக்கு அருவாளும் பேமஸ் ஆச்சே.

ஆச்சா ஆட்டுக்கு அடிச்சிக்கிராங்கலா. அடுத்து கோழி தான்.பயப்படாதிக கோழி கறிக்கி கூடிக்கிடுவாங்க.

கோழிக்கடையில் போய் நம்ம மாப்பிளை வந்திருக்காப்பில நல்ல வெடக் கோழியா பார்த்து கேட்டான். அதுவும் சேவலா ஆகாது. அங்காளி பங்காளிக்குள்ள சண்டை வந்துடக்குடாதுனு கவனமா இருப்பான்.

அன்னைக்கி அவ்வளவு அமைதியா ஒன்னாக் கூடி சாப்பிடுவாங்க. இதுக்கு தான். ஆட்டுக்கு அடிச்சிக்குவான் கோழிக்கி கூடிக்குவான்பாங்க.

இப்பெல்லாம் கோயில்லயும் சரி வீட்டுலயும் சரி ஆட்டை யாரும் அடிச்சிக்க விரும்புறது இல்ல. ஏன்னா உயிர் பலிக் கூடாதுனு சட்டமே வந்துட்டு. ஆனாலும் சில இடங்களில் இன்னும் அந்த கொடுமை நடக்க தான் செய்யுது.

முன்னயெல்லாம் பங்குனி உத்திரத்திற்கு எங்க வீட்டுலயே வண்டி கட்டி குடும்பமா கோபிலுக்கு போய் கறி சோறு திண்போம். இப்பெல்லாம் நாகரிகம் வளர்ந்த பின் எல்லாரும் ஆள் ஆளாலுக்கு ஒரு இடத்தில் இருக்காங்க. அப்படியே கோயிலுக்கு போனாக் கூட தேங்காய் பழத்தோடு முடிச்சிக்கிறோம்.

சாரி மங்கைஸ் இங்கே நிறைய பேர் வெஜீடெரியனா இருக்காலாம். நான் இங்க சொல்லுரதெல்லாம் உயிர் பழி கொடுத்து உடம்பை கெடுப்பதை விட சத்தான கீரை காய்கறிகளை சாப்பிடுங்க என்பது தான்.

ஏன்னா எனக்கு இங்கே மட்டன்,மீன் கிடைக்காதே

Sunday, 27 December 2015

ஏகாதசி விரதம்காவத்து, குர்க்கை, துவாசி. இதெல்லாம் என்னனு தெரியுமா. எனக்கே இன்னைக்கி தான் தெரியும். திருவாதிரை களியோடு ஏழு வகை கூட்டுக்கு சேர்த்து கொண்ட கிழங்கு வகைகள் தான் இது.

பக்கத்து ஆத்து மாமி காவத்து தெரியுமானு கேட்டாங்க. எனக்கு தெரியாதே மாமி. நீங்க எதை சொல்றேள்ன. அது ஒரு கிழங்கு. பார்க்க கரடுமுரடா இருக்கும். நறுக்கினா வழ வழனு இருக்கும்னாங்க

கோயமுத்தூர்லயும், கேரளாலயும் தான் கிடைக்கும். அதுவும் திருவாதிரை அன்னைக்கு மட்டும் தான் கிடைக்கும்னாங்க.


நீங்க என்ன கிழங்கை சொல்லுதிங்கனு தெரியலையே மாமினேன். உடனே வீட்டில் வெட்டி வைச்சிருந்த கிழங்கை காட்டி இது தான் காவத்துனாங்க.

ஹ்ஹாஹா. இது வள்ளிக் கிழங்கு மாமி. எங்க ஊரில் பொங்கலுக்கு சமைப்போம்னேன்.தை மாசம் பிறந்தால் எங்க ஊரில் கிடைக்காத காய்கறிகளே கிடையாது.

கோயமுத்தூர்ல மரவள்ளி கிழங்கு தெரிஞ்சவங்க. வள்ளிக் கிழங்கை காவத்துங்கிறாங்க.அப்பறம் குர்க்க கிழங்கு. அட நம்ம ஊர் சிறுகிழங்கை இங்க குர்க்க கிழங்குனு சொல்லுறாங்க.

துவாசி.இது என்ன தெரியுமா. நம்ம ஊர் நெல்லிக்காய் தான்.ஏகாதசி மறுநாள் துவாதசி. அன்னைக்கி நெல்லிக்காய் துவையல், பச்சடி செய்வோம். அதை தான் இவுங்க நெல்லிக்காய்க்கு துவாசினு சொல்லுறாங்க.

திருவாதிரை களி. திரு வாக்கு அளி என்பது தான் திரிச்சி திருவாதிரை களி ஆயிட்ட்டாம். அதைப் பற்றியெல்லாம் எனக்கு சரியா தெரியாது. ஆனா களி தெரியாம இருக்குமா.

திருநெல்வேலி பக்கம் பச்சரியோடு பயத்தம் பருப்பை வறுத்து பொடி செய்து சர்க்கரை வெல்லத்தோடு நெய் கலர்ந்து மணக்க மணக்க களி செய்வோம்.ஆனா இங்க வெறும் பச்சரிசியை ஊற வைத்து இடுத்து களி கிண்டி சர்க்கரைப் பாகை தனியா செய்து வைக்கிறாங்க.

களியை பாகுல் தொட்டு சாப்பிடனும். அதோடு ஏழு வகை காய்கறி கூட்டு செய்து பதினோறு இலை போட்டு படையல் வைக்கிறாங்க.

சிவனுக்கு ராத்திரி பூஜைனு இரவே படையல் போட்டு பூஜை செய்றாங்க. பூஜையில் களியும்,கூட்டும் தான் ஸ்பெஷல்.

ஒரு சிலர் ஏகாதசி அன்று விரதம் இருந்ததைப் போல் இன்று திருவாதிரைக்கி கோதுமை உணவு எடுக்கிறாங்க.விரதம் பிடிக்கும் போது துவாசினு( நெல்லிக்காய்)சொல்லக் கூடாதாம்.

நாளை மறுபடியும் துவாதேசி சாப்பாடு நெல்லிக்காய், அகத்தி கீரையோடு வேப்பம்பூ ரசம்.

விரதத்தில் எத்தனை வித்தியாசம்.இந்த வருஷம் விரதம் எனக்கு புது அனுபவத்தையே கொடுத்தது.
மார்கழி மறக்க முடியாத மாதம்.

"சம்பல்" தயிர் வெங்காயம்பெரிய நெல்லிக்காய் கேரட் 
இரண்டையும் துறுவிக்கோங்க.
கொஞ்சம் இஞ்சி, பச்சைமிளகாய்,
கொத்தமல்லி இலை,"பெல்லாரி" 
அதாவது பெரிய வெங்காயம் 
எல்லாத்தையும் பொடியா நறுக்கி 
தேவையான அளவு உப்புடன் கெட்டி 
தயிரில் கலர்ந்துக்கோங்க.
சம்பல் ரெடி.

பிரியாணி, சாப்பாத்தியோடு 
சாப்பிட சுவையாக இருக்கும்.