Tuesday, 28 July 2015

அன்னமும்,சுப்பு என்ற சுப்பு லெட்சுமியும்



விடியற்காலை மணி நாலு. ஒரே கும்மிருட்டா இருக்கு. பால் பண்ணையில் மூணரைக்கெல்லாம் பால் கறக்க ஆரம்பிச்சிடுவாங்க.

பற பறனு பல்லைத் தேய்த்து முகம் கழுவி தலைய வாரிச் சீவி ஒரு கொண்டையப் போட்டு தொழுவத்தில் கட்டி இருந்த மாட்டை இல்ல இல்ல சுப்புவையும், அவள் மகள் அன்னத்தை
கூட்டிக்கிட்டு நடந்தேன். யாராவது அதுங்கள எரும மாடுன்னு சொன்னா எனக்கு பொசுக்குனு கோவம் வந்துரும்.

சுப்புக்கு நடந்து வர இஷ்டமே இல்ல. பின்ன காலையிலயே நடக்கச் சொன்னா .பாவம் தான.

வா, சுப்பு இங்க பக்கத்துல தான் .சீக்கிரமா போய் பாலக் கறந்துக் கொடுத்துட்டு வந்திருவோம். அப்புறம் வந்து படுத்துக்கோ. சரியா” சுப்புகிட்ட பேசிகிட்டே நடந்தப்ப எதுத்தாப்புல குமார் வந்தான்.

மைனியோவ். எங்க மாட்டப் பத்திக்கிட்டுக் கிளம்பியாச்சி

ம்ம்ம். நீங்க எங்க இந்நேரம் குதிரை மேய்க்கவா கிளம்பிட்டிக கொழுந்தன்

அட, மைனிக்கு இடக்குகெல்லாம் பேசத் தெரியுமா?ஹாஹா

அப்பறம் என்ன? பால் கறக்க தான் பண்ணைக்கு கூட்டிட்டுப் போறேன்

பால் எத்தனை லிட்டர் கொடுக்கு மைனி உங்க எரும?”

“எருமைன்னு சொல்லாதீங்க கொழுந்தனாரே அது எங்க சுப்புலெச்சுமி, இது அவ மவ அன்னம். இன்னைக்குத்தான் முதல்தடவை பண்ணைக்கு கூட்டிட்டுப் போறேன். எத்தனை லிட்டர் கறக்கும்ன்னு தெரியாது

குமார் என் வீட்டுக்காரருக்குச் சித்திபையன். எழுதப்படிக்கத் தெரியாது என்றாலும் காலையிலும் மாலையிலும் கூட்டுறவு பண்ணையில் பால் கறந்து நாலுகாசு சம்பாதிப்பவன். ரவணசமுத்திரம் மலையில் பொழுதுக்கும் ஆடு,மாடுகளை மேய்ப்பான். எடுபிடி வேலைகள் எதுவென்றாலும் அவனைத்தான் கூப்பிடுவார்கள் வசதி படைத்த சனங்கள்.  

இப்படி போனா நீங்க போறதுக்குள்ள பண்ணைய இழுத்து மூடிடுவாங்க. எருமை மாட்டயெல்லாம் இப்படி வாலைப் பிடிச்சி முறுக்கி பத்தனும்

குமார் வாலை முறுக்கி ஒரு சவுண்ட் விட்டதும் சுப்பு வேகமா கொஞ்ச தூரம் நடந்தாள்.

அப்புறம் மைனி எங்க அண்ணனக் காணும்

அட. நீங்க வெர கடுப்பு ஏத்திக்கிட்டு

ஏன்? என்னாச்சி மைனி”

சும்மா கிடக்கமாட்டாம இதப் பிடிச்சிட்டு வந்து விட்டுட்டு போனவர் தான். எங்க போனார்னேத்
தெரியல

“அவன் ஒரு வெளங்காத பய. சரி, சரி. பண்ணை வந்துட்டு. நான் போய் மாடு கறக்கனும். நீங்க மெதுவா வாங்க மைனி உங்க சுப்புவக் கூட்டிக்கிட்டு”. குமார் எட்டி நடக்க ஆரம்பிச்சுட்டான்.

சுப்புவும், அன்னமும் பண்ணையப் பார்த்து ரொம்ப மிரண்டாங்க. கயிற்றைப் பிடிச்சி 
இழுத்து ஒருவழியா கூட்டிட்டு வந்துட்டேன்.

இது யாரு புதுஷா இருக்கு?”

அட நம்ம பலவேசம் மருமக

அடடா, ஆண்டி பயப் பொண்டாட்டியா?” பட்டணத்து பிள்ளை, மாட்டப் பத்திட்டு வந்து நிக்கிது

எல்லாரும் அவுங்க அவுங்க மாட்டுல பால் கறந்துகிட்டே என்னையும் என் மாட்டப்
பத்தியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.

இந்த ஆண்டிப் பயலுக்கு வந்த வாழ்வப் பாத்தியா. சும்மா ஊர சுத்திக்கிட்டுத் திரிஞ்சப் பயலுக்கு நல்லா படிச்ச பட்டணத்துப் பிள்ளக் கிடைச்சிருக்கு

ஆமாக்கா. உள் ஊர்ல யாரும் பெண்ணுக் கொடுக்கலைனதும் பலவேசம் ஊர் ஊராத் 
ஞ்சி திருஞ்சி இந்த பிள்ளயக் கொண்டு வந்திருக்கா. என்ன இருந்தாலும் பலவேசம் கெட்டிக்காரி

ந்தாயி. ஒம் பேர் என்ன?”

ஏம் பேரு தெய்வானை”

என்னது, தேவானையா?”

நீங்க என்ன தாயினே கூப்பிடுங்கஎனக்கு ரொம்ப வெக்கமா இருந்திச்சி.

எல்லாரும் அவங்கவங்க மாட்டுல பால் கறந்துட்டே என்கிட்ட வெவரம் கேட்டுட்டு இருக்கைல நான் மட்டும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருந்தேன். யாருகிட்ட போய் பால் கறக்க சொல்றதுன்னும் தெரியல. தாய்வீட்ல ஏழாவது புள்ளையா பிறந்து, அப்பாவும் இல்லாம அக்காள்களோட அரவணைப்புல வளர்ந்தவ. எங்க வீட்டு தொழுவத்துல பசு மாடு தான் உண்டு. இங்க எருமை மாடுகளும் கிராமத்து பால்பண்ணையும், கேள்வி கேட்டு துளைச்செடுக்கும் மனுசங்களும் வித்யாசமா தெரிஞ்சாங்க.

பண்ணைக்கார்ட்ட போய் அண்ணா, எனக்கு பால் கறக்கத் தெரியாது. என் மாட்டுலப்
பால் கறக்கனும். யாரையாவது கறக்கச் சொல்லுங்க அண்ணே”ன்னேன்

பண்ணைக்கார் ரொம்ப நல்லவர்னு தங்கம் சொன்னா. தங்கம் இந்த ஊருக்கு வந்ததும் எனக்கு கெடச்ச முதல் தோழி.

கொஞ்சம் நில்லுமா. யாராவது வரட்டும். வந்ததும் கறக்கச் சொல்லுதேன்

“நன்றி அண்ணா

எல்லாரும் பாலக் கறந்து அளந்து கணக்கு கொடுத்துட்டு போயிட்டே இருக்காங்க.
எனக்கும் அன்னத்திற்கும் பொறுமையே இல்லை.

அண்ணே

இந்தா, வாரேன்மா

அங்க யாராவது பால் கறக்க இருக்கீங்களா. இருந்தா இந்த பிள்ளைக்கி கொஞ்சம் கறந்து கொடுங்க. பாவம் ரொம்ப நாளியா நிக்கிது”ன்னு கூட்டத்தப் பாத்துக் கேட்டார்.

குமார் தான் வந்து என்ன மைனி பால் கறக்கத் தெரியாமலேயே மாட்டப் பத்திட்டு
வந்திட்டிங்களா என்றான்.

தங்கம் தான் சொன்னா இங்க கறந்து தருவாங்கனு. அதான் வந்தேன்

சரி, கறக்கிறதுக்கு சம்பளம் கொடுக்கனுமே அத சொன்னாளா உங்க தங்கம்

சம்பளம் தானே வாங்கிக்கோங்க

இவருக்கு என்னைய கேலிப் பேசுவதே வேலையாப் போச்சி. ஒருவழியா பாலைக் கறந்து செம்பக் கையில வாங்கிப் பாத்தா அரைச் செம்பு பால் தான் இருக்கு. அதைக் கொண்டுப் போய் அளந்து கொடுத்தா அரை லிட்டர் பால் தான் இருந்தது.

என்ன மைனி பால் அளந்திட்டேளா, முதல்ல மாட்டுக்கு பேர் வைக்கிறதுக்கு முன்னாடி நல்லா தீனி வைய்ங்க

குமார் சொன்னதும் எனக்கு வெட்கம் பிடிங்கி திங்க ஆரம்பிச்சிட்டு. வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையா தங்கத்தைப் போய் பார்த்தேன். 

ஏய் தங்கம்

என்ன அக்கா
.
நீ இன்னைக்கி புல் அறுக்க போவியா

ஆமாம் போவேன். ஏங்கா?”

நானும் உங்கூட வாரேன்

என்னது.... புல் அறுக்கவா?”

ஆமாம்.ன் சுப்பு இன்னைக்கு அரை லிட்டர் பால் தான் கொடுத்தா . அதுக்கு அந்த குமார்
என்னைய ரொம்ப கிண்டல் பண்ணிட்டான். எப்படியாவது என் சுப்புவ நல்லா சாப்பிட வச்சி
நிறையப் பால் கறக்க வைக்கனும்

சரிக்கா, நான் போகும் போது கூட்டிட்டுப் போறேன். மச்சான் வந்தா என்ன வையுமே

ஆமா, மாடு வாங்கினவருக்கு அதுக்கு தீனி வாங்கி கொடுக்க தெரியல. இதுல வைய வேச் செய்வாராமில்ல.சரி நீ போகும் போதுக் கூப்பிடு

சரிக்கா, உனக்கும் சேர்த்து அறுவாளும்,சாக்கும் எடுத்துட்டு வந்துடுறேன்க்கா” தங்கம் அவ வேலைய பாக்க போய்ட்டா.

நான் கொஞ்சம் வைக்கோலை பிடிங்கி சுப்புக்கு முன்னாலப் போட்டுட்டு .அன்னத்துக்கு பக்கத்து வீட்டு அத்தைட்ட போய் சோறு வடித்த கஞ்சியில கொஞ்சம் தவிடுப் போட்டு
பக்கத்தில வைச்சா முகத்த ஒரு திருப்பு திருப்பிக்கிட்டாள்.

ஏன் என்னாச்சி நீ எலும்பும் தோலுமா இருந்தா என்னைய எல்லாரும் கிண்டல் ண்ணுறாங்கல அதனால இதையெல்லாத்தையும் சாப்பிட்டு  நல்லா பூஸ்டியா ஆகி அவுங்க எல்லாத்தையும் முட்டித் தள்ளிடுவியாம். சரியா?” கதைப் பேசி பேசி ஊட்டி விட்டேன். அதுக்கும் கிண்டல் செய்தாங்க .

கொஞ்ச நேரத்துல தங்கத்தோட குரல் கேட்டுச்சு “அக்காவர்ரேளா”

 இதோ வந்துட்டேன்

தங்கம் கொண்டு வந்த சாக்கையும் ,அறுவாளையும் வாங்கிட்டு புல் அறுக்க போனேன். வயல் வரப்பில் தங்கம் நடக்குற வேகத்துக்கு என்னால நடக்க முடிலை. செருப்பு ரெண்டையும் கையில எடுத்துக்கிட்டு கூடவே நடந்தேன். வயல்ல அறுவடை முடிஞ்சி வயலுக்கு தண்ணிப்பாச்சிக்கிட்டு இருக்கவங்க எல்லாம் என்னைய வேடிக்கைப் பாத்து அவுக்களுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டாங்க. கதிர் எல்லாம் அறுத்திட்டு மிஞ்சி இருக்குறதுக்கு பேர் ஒவேயாம். அதை அறுக்க தான் கூட்டிட்டு வந்திருக்கா.

சரிய். இப்ப புல் அறுக்க தெரியுமா அக்கா

புல்லுத் தானே. அதெல்லாம் அறுத்துடுவேன்

என்ன அறுவாள வைச்சி அறுக்க படிக்கனுமாக்கும். சரி இங்கேயே அறுப்போம். வயல்ல ஒரு ஓரத்தில சாக்க நல்லா விரிச்சி வச்சிட்டு புல்லை அறுக்க ஆரம்பிச்சோம். தங்கம் விறுவிறுனு அறுத்து மடியிலப் போட்டுக்கிட்டு மடி நிறைந்ததும் சாக்கிலப் போட்டாள். நான் கொஞ்சம் கொஞ்சமா அறுத்து சாக்கிலப் போய் போட்டேன்.

அக்கா, இப்படி அறுத்து எப்ப சாக்கு நிறைஞ்சி வீட்டுக்கு போகிறது

உன்ன மாதிரி எனக்கு மடிக்கெட்டத் தெரியாதே

அதுக்கு இப்படி சாதா உடைக் கட்டனும். அப்ப தான் முதுகிலே தொட்டில் போட்டு புல்ல
அறுத்து அதிலப் போடனும். அது நிறைஞ்சதும் சாக்கிலப் போய் போட்டா அங்கிட்டும் இங்கிட்டும் நடக்க வேண்டாம்

ஓ... அதுக்கு தான் என்னையப் பார்த்து சிரிச்சாங்களா. சரி, சுப்புவுக்காக என் ஸ்டைல மாத்துதேன்.

எனக்கும் உன்னப் போல சேலையைக் கட்டிவிடேன். அவளை மாதிரி சேலையைக்
கட்டிக்கிட்டு வேக வேகமாப் புல் அறுத்தாச்சி.

எந்த வேலையும் ஒருதரம் சொன்னாப் போதும் அப்படியே கற்பூரம் மாதிரி பிடிச்சிக்கிடுவேன்.
சுமையைத் தூக்கிட்டு நடக்கனும். சாதாரணமா வரப்புல நடக்குறதெ கஷ்டம். இதுல புல்லுக்
கட்டு வேர . சுமையைத் தூக்கி வைச்சதும் வந்தது பாருங்க ஒரு ஆட்டம்.
.
க்கா, தூக்கிடுவிங்களாக்கா?” தங்கத்துக்கு என் ஆட்டத்த பாத்து பயம் வந்துடுச்சு. விடுவோமா நாம, துணிந்தவனுக்கு புல்லுக் கூட ஆயுதம். புல்கட்டோட வீட்டுக்கு வந்தாச்சு.

புண்ணாக்கும், தவிடு, பருத்திகொட்டையுமா ஊட்டி. ஊட்டி எங்க சுப்பு ஒரு நாளைக்கு நாலு
ஐஞ்சி லிட்டர் பால் கொடுக்க ஆரம்பிச்சிட்டாள். அன்னமும் சூப்பரா வளர்ந்து நிக்கிறாள். நான் இப்ப ரொம்ப சந்தோஷம்மா இருக்கேன்.

இங்க ஆண்டி நம்பியார் வீடு எங்

குரல் கேட்டு யாரு நம்ம வீட்ட விசாரிக்கிறதுன்னு வெளிய வந்துப் பார்த்தா போலீஸ்க்காரர் நின்னுட்டு இருக்கார்.

வணக்கம். சார். நான் ஆண்டிநம்பியார் ஒய்ப் சார்

அப்படியாமா. ஆண்டி நம்பியார் இருக்கிறாரா

இல்லையே சார். என்ன விசயமாத் தேடி வந்திருக்கிங்க சார்

அவரோட அம்மா அவர் மேல்ல கம்ளெயிண்ட் கொடுத்து இருக்காங்கமா

எதுக்கு சார்?”

அவுங்க வீட்டுலக் கட்டி இருந்த மாட்டையும், கன்றுக்குட்டியையும் அவுத்துட்டு. வந்துட்டாராம்

அவர் அப்படி சொன்னதும் எனக்கு கண்ணுல தண்ணி கட்ட ஆரம்பிச்சிடுச்சு. பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் கூட்டமா கூடி ஆளாளுக்கு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்கள எல்லாம் அதட்டிட்டு என் கிட்ட திரும்பினார் போலீஸ்காரர்.

எல்லாரும் அமைதியா இருங்க. நீங்க சொல்லுங்கம்மா

சார், இந்த மாடும், கண்ணுக்குட்டியும் என் கல்யாணத்துக்கு எங்க அம்மா எனக்கு
போட்ட செயின அடகு வச்சி வாங்கினது. வயல்ல அறுவடை சரியில்லை. வேற வேலையும் இல்லைனு அவுக தங்கச்சிட்ட நின்ன மாட்டையும், ன்னுக்குட்டியையும் விலைக்குப் பிடிச்சிட்டு வந்தார் சார்

சரிமா. அவரு வந்ததும் ஸ்டேசனுக்கு வரச்சொல்லுங்கம்மா. நான் இன்ஸ்பெக்டர்டச்
சொல்லுதேன்

ரொம்ப நன்றி சார்

போலீஸ்காரர் போய்ட்டார். கொஞ்சம் கொஞ்சமா கூட்டம் குறைய ஆரம்பித்து நான் சுப்புவையும்,அன்னத்தையும் பிடிச்சிக்கிட்டு அழுதேன் .எல்லாரும் ஆறுதல் சொன்னாங்க. எனக்கு கொஞ்சம் பயமாத் தான் இருந்துச்சி எங்க என் சுப்புவும், அன்னமும் என்னை விட்டு போய்டுவாங்களோனு.

சாயங்காலம் மணி 4.00. வெளில கனகாவோட சத்தம் கேட்டுச்சு. கனகா, என்னோட நாத்தனார் புருஷன் கூடப்பிறந்தவள்.

மைனி”

என்ன கனகா. வா வீட்டுக்குள்ளே

நான் வரலை. எங்க அண்ணன் இருக்கானா?”

ஏன் கனகா உங்க அண்ணன் இருந்தால் தான் வருவியா என்ன

எனக்கு அண்ணன் ரூபா தரனும். அதான் கேட்டுப் போக வந்தேன்

என்ன ரூபா தரனும்?” 

மாட்டையும், கண்ணுக்குட்டியையும் அவுத்துட்டு வந்திச்சி. பணம் தாரேனுட்டு தரல. அதான்”

பக்கத்து வீட்டுப் பாட்டி ஏய் கூறுக்கெட்ட செரிக்கி மாட்டக் கொடுத்தவ அப்பவே ரூவாய வாங்காம இப்ப வந்து நிக்கித”ன்னு கோபப்பட்டாங்க.

இருங்க பாட்டி, சரிய், உனக்கு எவ்வளவு பணம் தரனும்

இல்லை மைனி, எனக்கு பணமெல்லாம் வேண்டாம். என் மாட்டையும் கண்ணுக்குட்டியும்
கொடுத்தாப் போதும். என் புருஷன் சண்டை போடுதார்

எவ்வளவுச் சொல்லியும் கேட்காமல் என் சுப்புவும்,அன்னமும் கதறக் கதற இழுத்துட்டுப் போய்ட்டாள் .நான் அழுதுக்கிட்டே இருந்தேன். தங்கம் தான் ஆறுதலா இருந்தா. மாடு மேய்க்கப் போனக் குமாரு நான் அழுகிறதப் பார்த்து ஏன் மைனி அழுதிக”ன்னு கேக்க, தங்கம் நடந்ததையெல்லாம் சொன்னா.

அடப்பாவமே. இவ்வளவு நடந்திருக்கா. மைனி, எங்க அண்ண உங்கள நல்லா ஏமாற்றி இருக்கான்

நீ என்ன சொல்லுதக் குமாரு

ஆமா மைனி, இந்த வருஷம் அண்ண வயல்ல முக்கா மேனி நெல் கிடைச்சிருக்கு. அதுக்கு
உங்களுக்கு செயின் செஞ்சிப் போடனும். அத விட்டுட்டு உங்க கழுத்தில் உள்ளத கழட்டி
இருக்கான்

என் செயினப் பத்தி நான் கவலைப் படலை. எனக்கு துணைக்கி துணையா பிள்ளை மாதிரி 
இருந்ததை இழந்துட்டேனே

சரி, அழுகாதிங்க மைனி” யாரு ஆறுதல் சொன்னாலும் என் அழுகை நிக்கவா போகுது.

நாலு மாதம் கழிச்சி வீட்டுக்கு வந்தவர், வந்த உடனே தொழுவத்துல போய் எட்டிப் பாத்தார்.

எங்க மாட்டையும் கண்ணுக்குட்டியும்

உங்க தங்கச்சி கூட்டிட்டு போயிட்டா

நீ எதுக்கு அவட்ட மாட்ட விட்ட

பணத்தைக் கொடுக்காம மாட்டை வைச்சிக்கிட்டா சும்மா இருப்பாளா. ஆமா, என் செயினை என்னச் செஞ்சிங்க?”

ஒன் செயின் தான, இந்த அறுப்புலத் திருப்பித் தாரேன். அதுவரைக்கும் ஒண்ணும்
பேசக் கூடாது.

இன்னும் பேசாத் தான் இருக்கிறேன்.


No comments:

Post a Comment