சின்ன வயசில எங்கம்மா எனக்கு தலை சீவி ஜடைப்போட்டு விடுவாங்க.
காலையில பின்னுர ஜடைய மறுநாள் காலையில் தான் அவுக்கனும்.
எனக்கு முடி வேற நல்லா நீண்டு அடர்தியா இருக்கும்.
அப்படியே விரிச்சி விடனும்னு ஆசையா இருக்கும். ஆனா அம்மா விடமாட்டாங்க. கண்ணுப் பட்டுடுமாம்.
விசேஷ நாள்கள்ல தாழம்பூ வைச்சி தைச்சி அதில் மல்லிகை, கனகாம்பரம், மருக்கொழுந்துனு வரிசையா வைச்சி நூல் சுற்றி விடுவாங்க.
அன்னைக்கி ஒரே பாட்டும் டான்ஸ்ஸுமா தெருவே சந்தோஷமா இருக்கும்.
அதுல போட்டி வேற இருக்கும். ஒன் ஜடைய விட ஏன் ஜடை தான் அழகுனு.
ஆனா இப்போ ஜடைப் போட்டா பட்டிக்காடாம். அப்படியே விரித்து விடுவது தான் பேஷனா ஆயிட்டு.
அது மாதிரி தான் பூ வைப்பதும். சின்ன வயசில் விரும்பி வைத்த கனகாம்பரமும். பெரியவள் ஆனதும் கனகாம்பரம் பூ வைப்பது இல்லை. ஏன் பாத்து ரொம்ப நாள் ஆயிட்டு.
இன்று ஒரு வீட்டில் அழகுக்காக வாசலில் வைத்திருந்தார்கள். பழைய ஞாபகத்தில் சுட்டுட்டேன்.
No comments:
Post a Comment