சுமார் ஒரு பதினொரு மணி இருக்கும் நான் கவனிக்கும் வயதான அம்மா ஹால்ல லைட்டப் போட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தார்கள்.
நான் என்னவாக இருக்கும்னு கேட்கும் போது செல்போனை காணும்னாங்க.
எப்போதும் பக்கத்தில் தான் வைத்திருப்பார்கள். தூங்க போகும் போது நான் தான் கட்டில்ல வைப்பேன்.
போனக் காணும்னு சொன்னதும் எல்லா பக்கமும் தேடிட்டு கடைசியா போர்வைக்கு கீழ் இருந்து எடுத்து கொடுத்தேன்.
போன் எங்க இருந்ததுனு கேட்டதுக்கு நான் நீங்க மூடிப் படுக்கும் போர்வைக்கு கீழ் இருந்தது என்றேன்.
உடனே சண்டைக்கு வந்துட்டாங்க. நான் சொன்னது தப்பாம்.
இதில் என்ன தப்பு என்றால் "மூடிப் படுக்கும்" என்று சொல்லக் கூடாதாம். போர்த்திப் படுக்கும் என்று சொல்லனுமாம்.
கிளாஸ் எடுத்தாங்க பாருங்க எனக்கு வராத தூக்கமும் இனி வருவேனா நான்னு போயிட்டு..
பாட்டிக்கு செல்போனை எடுத்து கொடுத்ததே மொதல்ல தப்பு...
ReplyDelete