Saturday 20 February 2016

முதல் காதல்




மண்வாசனை படம் ரிலிஸ் ஆன புதுசு. அப்பெல்லாம் வாலிப பசங்களுக்கு ரேவதியும் ராதாவும் தான் கனவு தேவதைகள்.

பெருமாள் அண்ணாச்சி காமவுண்ட் தான் ஒட்டு மொத்த பெண்களின் ப்ருந்தாவனம்.

காலையில நாலு மணிக்கெல்லாம் எந்திருச்சி படிப்பேன்.அம்மாவும், அக்காவும் வேலைக்கு போனதும் கதவை அடைச்சிட்டு தலைமாட்டில் ரேடியாவை பாட விட்டுட்டு தூங்கிடுவேன்.

மணி 7.30 ஆனதும் என் கூடப் படிக்கிற பிள்ளைகள் ஒவ்வொருத்தரா வந்த பிறகு தான் ஸ்கூலுக்கு கிளம்புவேன். எந்த தியோட்டர்ல என்ன படம் ஒடுது. யார் நைட் ஸ்ஸோ படம் பார்க்க போனானு கதை கதையா பேசுவோம்.

மொத்தமா பத்து பேருக்கு குறையாமல் ஒன்னா ஒரே மாதிரி யூனிபாம் போட்டு ஸ்கூலுக்கு கிளம்பி போனால் எங்களை எதிர் பார்த்து ஒரு கூட்டம் அங்கு நிற்கும்.

ஸ்கூல் நடந்து போகும் தூரம் தான். பக்கத்தில் நான்கு வழி சாலை வேறு. அதை கடக்க நிற்கும் போது பக்கத்து ஹோட்டலில் என்ன பாட்டு ஓடிட்டு இருந்தாலும் சரி எங்களை பார்த்ததும் மண்வாசனை படத்தில் அரிசி குத்தும் அக்கா மகளேனு பாட்டை ஒட விட்டுவாங்க.

ஒருநாள் சனிக்கிழமை மதியம் வரைக்கும் தான் ஸ்கூல். எப்பவும் அக்கா வேலை செய்யும் வீட்டுக்கு தான் ஸ்கூல் விட்டதும் போவேன். ஆனா அன்னைக்கி பிள்ளைகளோடு சேர்ந்து எங்க வீட்டுக்கு வரும் போது தான் அவனைப் பார்த்தேன்.

அப்படியே பாண்டியன் போல் தோற்றதில். அவனோட நண்பனிடம் என்னை கைக் காட்டி எதோ சொல்லிக்கிட்டு இருந்தான்.

சரி பூவா நாளைக்கி லீவு .வீட்டில் தானே இருப்பே. என் காதில் விழுந்த முதல் வார்த்தை அது.அதில் இருந்து என்னை பார்க்கும் போது எல்லாம் பூவா பூவானு யாரிடமாவது பேசிக்கிட்டு இருப்பான். நானோ வேகமா நடையக் கட்டுவேன்.

எங்க காமெவுண்டில் ரவினு ஒரு சின்னப் பையன் உண்டு. அவன் கிட்ட தான் என்னைப் பற்றி எல்லாம் கேட்டு வைச்சிருந்திருக்கான்.எனக்கும் அவனை பிடிக்கும். ஆனா பேச மாட்டேன்.

பிறந்ததுமே அத்தை மகனுக்கா வளர்க்கப்பட்டவள் .எப்படி அவனிடம் பேச முடியும். ஆனால் அத்தை பையனை ஒரு முறைக் கூடப் பார்த்ததில்லை.

ஒரு முறை எனக்கு உடம்பு முடியாமல் போனப்போ எனக்காக வேண்டிக்கிட்டு கோயிலுக்கு போய் மொட்டை போட்டுக்கிட்டான்.அதுவும் கூட ரவி பயல் சொல்லி தான் தெரியும்.

மெல்ல மெல்ல ஸ்கூல பிள்ளைகள் எல்லாத்திற்க்ய்ம் தெரிந்து ஒரே கிண்டலும் கேளியும் தான்.சந்தர்ப சூழ்நிலையில் எனக்கோ வேறு ஒருத்தரோடு திருமணம் ஆயிட்டு.

அப்போ தான் ரயில்பயணமும், ஒரு தலை ராகமும் இன்னும் சில காதல் தோல்வி படங்கள் வெளி வந்தது.
அப்பறம் என்ன ஒரே சோகப் பாட்டு தான் நான் ஒரு ராசியில்லா ராஜா. இரண்டு பிள்ளைகள் ஆன பிறகு தான் தாடியோடு அவனைப் பார்த்தேன்.

முதல் காதல் என்றும் மறக்க முடியாதது.

4 comments:

  1. மண்வாசனை ரேவதி என்றும் நீங்காத நினைவு! அருமையான பகிர்வு!

    ReplyDelete
  2. வாழ்வின் சில சுகமான அனுபவங்கள், சுமைகள், வலிகள் மற்றும் சந்தோஷம் நிறைந்தது.

    அவை நம் வாழ்வில் தொடர்ந்து வரும் நிழல்கள்!

    தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அருள்மொழிவர்மன் .... ''தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்!''

      ???? எங்க எழுதுறது கடைசியா வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட சொன்னவங்கதான் ... நான்கு வருடமா ஆளையே காணோம் ...!
      https://www.scientificjudgment.com/

      Delete