Thursday 25 February 2016

சொதிக் குழம்பு




திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக் குழம்பு


கேரட்,பீன்ஸ்,உருளை,முருங்கைக்காய் எல்லாத்தையும் நீளவாக்கில் ஒரே மாதிரி நறுக்கிக்கோங்க.

இஞ்சி,பூண்டு,வெங்காயம்,பச்சைமிளகாய்,பட்டை,கிராம்பு,ஏலம்,சோம்பு சேர்த்து நல்லா மைய அரைச்சிக்கோங்க.

ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை உப்பு, மஞ்சள் சேர்த்து வேக விடுங்க.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு,பட்டை,கிராம்பு போட்டு தாளித்து அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதில் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கி வேகும் காய்கறிக் கலவையில் சேருங்க.

காய்கறிகள் நல்லா வெந்தது. கொஞ்சம் நிலக்கடலை,முந்திரிப் பருப்பை நல்லா மையாக அரைத்து கலவையில் சேர்த்து கொதி வந்ததும் கறிவேப்பிலை, மல்லிதழை போட்டு இறக்கவும்.

நிலக்கடலைக்கு பதில் தேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.

சப்பாத்தி, தோசை,இட்லிக்கும் சேர்த்து சாப்பிடலாம். மிகவும் ருசியா இருக்கும்

1 comment:

  1. நம்ம ஊரு சொதி குழம்புன்னா நல்லாத்தான் இருக்கும் ...அது சரி பூங்கோதையின் பயணம் 2016 க்கு பின் தொடராமல் நின்றுபோனது ஏனோ?
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete