
திருநெல்வேலி பக்கம் "ஆட்டுக்கு அடிச்சுக்குவான், கோழிக்கி கூடிக்குவான்னு" ஒரு பழமொழி உண்டு.
ஊருக்குள்ள என்ன விசேஷ்ம்னாலும் உடனே சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைப்பதில் நம்மூர்காரனை யாரும் அசைச்சிக்க முடியாது.அம்புடு பாசக்காரன்ங்க.
கோயில்ல கொடை வந்தா போதும் கடனகிடன வாங்கி வீட்டுக்கு ஒரு ஆட்டைக் கட்டிப் போட்டுக்குவோம். அதுக்கு் நல்லா இறைப் போட்டு கொழு கொழுனு வளர்த்து வைச்சிப்போம்.
அங்காளி பங்காளி வீட்டுல போய் ரொம்ப மரியாதையா கோயில் கொடைக்கி வரச் சொல்லி வெற்றிலையில காசு வைச்சிக் கூப்பிடுவான்ங்க.
அதுமட்டுமா மச்சான் கிடா வாங்கி விட்டுருக்கேன் குடும்பத்தோடு வந்துடுன்ன. ஒ...அப்படியா சரி மாப்பிள கிடால்லாம் வாங்கி விட்டுருக்க வராம இருப்பேனா. கண்டிப்பா வந்துடுவேன்னு ரொம்ப சந்தோஷமா அனுப்பி வைப்பான்.
கொடை நாளும் வரும். மாப்பிள்ளையும் மச்சானும் ஊர்க்கண்ணே படும் அளவுக்கு ஒற்றுமையா சாமி கும்பிடுவதையும்,பொங்கல் வைப்பதையும் பார்க்கனுமே.
அடுத்த அடி ஆரம்பம் வீட்டில பிள்ளைப் போல் வளர்த்த கிடா குட்டி மேல் விழும்.வெட்டுப் பட்ட கிடாவை அடி பிடினு ஆள் ஆளுக்கு அடிச்சிப் பிடிச்சி கறி அடுப்பில் கொதிக்கும்.
வா மச்சான் கொஞ்சம் சரக்கு ஏற்றுவோம்னு வேண்டிய மட்டும் நல்லா போதைய ஏற்றும் போது தான் அவன் அவனுக்கு ஆயிரத்தெட்டு கேள்வி எழும்பி கொஞ்சம் மனக் கஷ்டம் வரும்.
அப்பறம் என்ன சாப்பாடு தான். இலையில சோறு விழும் முன்னே வசைச் சொல்லும் வந்து நிற்கும். மச்சானுக்கு நல்லா எழும்பு கறியா பெறக்கிப் போடு கடிக்கட்டும்பான்.
நான்னென்ன எழும்பு கடிக்கவா இங்க வந்தேன்னு ஆரம்பிச்சி சில நேரத்தில் வெட்டு குத்து வரை போகும்.ஏன்னா நம்ம ஊர்க்காரனுக்கு அருவாளும் பேமஸ் ஆச்சே.
ஆச்சா ஆட்டுக்கு அடிச்சிக்கிராங்கலா. அடுத்து கோழி தான்.பயப்படாதிக கோழி கறிக்கி கூடிக்கிடுவாங்க.
கோழிக்கடையில் போய் நம்ம மாப்பிளை வந்திருக்காப்பில நல்ல வெடக் கோழியா பார்த்து கேட்டான். அதுவும் சேவலா ஆகாது. அங்காளி பங்காளிக்குள்ள சண்டை வந்துடக்குடாதுனு கவனமா இருப்பான்.
அன்னைக்கி அவ்வளவு அமைதியா ஒன்னாக் கூடி சாப்பிடுவாங்க. இதுக்கு தான். ஆட்டுக்கு அடிச்சிக்குவான் கோழிக்கி கூடிக்குவான்பாங்க.
இப்பெல்லாம் கோயில்லயும் சரி வீட்டுலயும் சரி ஆட்டை யாரும் அடிச்சிக்க விரும்புறது இல்ல. ஏன்னா உயிர் பலிக் கூடாதுனு சட்டமே வந்துட்டு. ஆனாலும் சில இடங்களில் இன்னும் அந்த கொடுமை நடக்க தான் செய்யுது.
முன்னயெல்லாம் பங்குனி உத்திரத்திற்கு எங்க வீட்டுலயே வண்டி கட்டி குடும்பமா கோபிலுக்கு போய் கறி சோறு திண்போம். இப்பெல்லாம் நாகரிகம் வளர்ந்த பின் எல்லாரும் ஆள் ஆளாலுக்கு ஒரு இடத்தில் இருக்காங்க. அப்படியே கோயிலுக்கு போனாக் கூட தேங்காய் பழத்தோடு முடிச்சிக்கிறோம்.
சாரி மங்கைஸ் இங்கே நிறைய பேர் வெஜீடெரியனா இருக்காலாம். நான் இங்க சொல்லுரதெல்லாம் உயிர் பழி கொடுத்து உடம்பை கெடுப்பதை விட சத்தான கீரை காய்கறிகளை சாப்பிடுங்க என்பது தான்.
ஏன்னா எனக்கு இங்கே மட்டன்,மீன் கிடைக்காதே
"ஆட்டுக்கு அடிச்சுக்குவான், கோழிக்கி கூடிக்குவான்னு" பழமொழி நல்லாஇருக்கே...!!!
ReplyDelete