Monday 13 July 2015

காத்திருக்கேன்


கொத்து மஞ்சள் நான் குழைத்து
அங்கம்மெல்லாம் பூசிகிட்டேன்

நாலு கண்ணி பூவெடுத்து
கொண்டையில வச்சிக்கிட்டேன்

இந்த பூவை வைக்கலைனா
யாரு உன்ன கேட்குறானு
கொத்து பூவை கையெடுத்து
கூந்தலில வைச்சி விட்ட


வைச்சப் பூ வாடும் முன்னே
அந்த கொலகார பாவிக் கூட நீ
போவதெங்கேனு சொல்லலையே?


தினம் கொத்து பூவை கட்டி வைச்சி
காத்திருக்கேன் உன்னக் காணலையே


ஆக்கி வைச்ச சோத்த நீ 

அள்ளி வைச்சி திங்கலையே

அந்த ஆகாயம் போனதென்ன
என்ன அந்தரத்தில் விட்டதென்ன


கண்ணு கலங்கையில நீ
கை கட்டி நின்னதென்ன


நீ எப்போ வருவேனு நான்
வாசப் படி காத்திருக்கேன்.


°பூங்கோதை°°°


- July 13 2015

1 comment:

  1. கவிதை... ஓவியம் அருமை..

    ReplyDelete